ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சில மாதங்களுக்கு முன் விஷ்ணுவிஷால் நடிப்பில் வெளியான கதாநாயகன் என்ற படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. தயாரிப்பு வேண்டாம் என முடிவெடுத்த விஷ்ணு, இந்த முடிவை எடுப்பதற்கு முன் தயாரிக்கப்பட்ட படம் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'.
காமெடிப் படமான இதை, செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் ஜோடியா ரெஜினா கெசான்ட்ரா நடித்துள்ளார். ஓவியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முண்டாசுபட்டி ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸான 'ராட்சசன்' அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. இந்தப் படம் 50 நாட்களைக் கடந்து தியேட்டர்களில் ஓடியது. க்ரைம் த்ரில்லர் படமான இப்படத்தில் போலீஸாக விஷ்ணு விஷால் நடிக்க, அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்தார்.
'ராட்சசன்' படம் வெற்றி பெற்றதால் சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்துக்கு நல்ல வியாபாரம் கிடைத்திருக்கிறது. படத்தை பெரிய லாபத்துடன் பிசினஸ் பண்ணிவிட்டார் விஷ்ணு விஷால். இந்த மகிழ்ச்சி உடன் படத்தை இந்த மாதம் (டிசம்பர்) 21-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளார்.