ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
என்டிஆர் வாழ்க்கை கதையில் உருவாகி வரும் கதாநாயகுடு படத்தை கிரிஷ் இயக்கி வருகிறார். பாலகிருஷ்ணா-வித்யாபாலன் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் என்டிஆருடன் நடித்த பல நடிகைகளின் கதாபாத்திரங்களில் இப்போதைய இளவட்ட நடிகைகள் நடிக்கிறார்கள்.
குறிப்பாக, ஸ்ரீதேவியாக ரகுல் பிரீத் சிங், சாவித்ரியாக நித்யா மேனன் ஆகியோர் நடிக்க, ஜெயசுதா வேடத்தில் மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.
இந்நிலையில், ஜெயபிரதா வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில் அடுத்தபடியாக என்டிஆர் - ஜெயபிரதா நடித்து சூப்பர் ஹிட்டான ஒரு தெலுங்கு பாடலும் இந்த படத்தில் இடம்பெறுகிறது. ஹன்சிகாவுக்கு, ஜெயபிரதா பாணியில் நடனமாடவும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.