மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கன்னட நடிகரும், முன்னாள் மத்திய - மாநில அமைச்சருமான அம்பரீஷ்(66) நேற்று பெங்களுருவில் காலமானார். அவரது இழப்பு கன்னட திரை உலகிற்கு மட்டுமல்ல இந்திய திரை உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் கூறியதாவது : "கன்னட நடிகர் சங்கம் தலைவர் அம்பரீஷ் அவர்கள் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நல்லுறவை பேணி காத்தவர். அவர் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும்வேதனை அடைகிறோம். இயக்குனர் புட்டண்ணாவின் நகராஜாவு என்ற கன்னட திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து, தன் கலை உலக வாழ்க்கையை துவக்கிய அம்பரீஷ், அதன் பிறகு வில்லன் வேடங்களில் நடித்து 1980-களில் கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிக பெருமக்களின் பேராதரவை பெற்று பிரபலமானார்.
கன்னட, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 230-க்கும் மேலான படங்களில் நடித்து சாதனை புரிந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதோடு கன்னட நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து நடிகர் சமூகத்தின் வளர்ச்சிக்காக அரும்பணி ஆற்றி வந்தார். சினிமா மட்டுமல்லாமல் அரசியலில் சட்டசபை - பார்லிமென்ட் உறுப்பினராகவும், மத்திய - மாநில அமைச்சராகவும் சேவை ஆற்றினார்.
அரசியலிலும் சினிமாவிலும் வரலாறு படைத்த அவரது மறைவு இந்திய நாட்டிற்கும் திரை உலகிற்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். தென்னிந்திய நடிகர் சங்கம் அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்து அஞ்சலி செலுத்துவதோடு அவரது இழப்பால் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ள அன்னாரது குடும்பத்தாரின் துக்கத்திலும் பங்கு கொள்கிறோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.