ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், பல படங்களில் இரண்டாவது நாயகனாகவும் நடித்து வந்தவர் விஜய் கார்த்திகேயன். அவர் தற்போது இயக்குனர் ஆகியிருக்கிறார். சூப்பர் பொண்ணு சுமாரான பையன் என்பது படத்தின் தலைப்பு. இதில் விஜய் கார்த்திகேயனே ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். வி.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி விஜய் கார்த்திகேயன் கூறியதாவது:
நான் சிறு வயது முதல் சினிமாவில் பயணிக்கிறேன். வியாபாரி படத்தில் வடிவேலு மகனாகவும்,நான் கடவுள் படத்தில் ஆரியாவின் சின்ன வயது கதாபாத்திரத்திலும், 16 என்ற படத்தில் 2வது நாயகனாகவும், மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன். பாக்யராஜ் உடன் இணைந்து குஸ்கா படத்தில் கதாநாயகனாகவும், அராத்து எனும் படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து 2வது ஹீரோவாகவும் நடித்துள்ளேன்,
சூப்பர் பொண்ணு சுமாரான பையன் படத்தை ஒரு கமர்ஷியல் கதையாக உருவாக்கி உள்ளேன். இது தந்தைக்கும் மகனுக்குமான சென்டிமென்ட்டை மையமாக கொண்ட கதை, படப்பிடிப்பை மலேசியாவில் தொடங்கி தேனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடத்த உள்ளோம் என்றார்.