அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ், உடல்நலக் குறைவால் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 66. சிறுநீரகம் மற்றும் நுரையீரல் தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சகிச்சை பலன் இன்றி மரணத்தை தழுவினார்.
1952ம் ஆண்டு மே 29ம் தேதி, மாண்டியாவில் பிறந்தவர் அம்பரீஷ். இவரது இயற்பெயர் மளவாலி ஹச்சே கவுடா அமர்நாத். 1972ம் ஆண்டு குணச்சித்திர நடிகராக அறிமுகமான அம்பரீஷ், பாக்ய ஜோதி படம் மூலம் ஹீரோவாக உயர்ந்தார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தனுஷின் ப.பாண்டி படத்தின் கன்னட ரீ-மேக்கில் நடித்தார்.
அம்பரீஷ், நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் ஆவார். தமிழில், ரஜினியுடன் ப்ரியா படத்தில் ஸ்ரீதேவியின் காதலராக, நடிகராக நடித்திருந்தார்.
நடிகராக மட்டுமல்லாது, அரசியல்வாதியாகவும் வலம் வந்தவர் அம்பரீஷ். காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்பியாகவும், ஒருமுறை மத்திய அமைச்சராகவும், எம்.எல்.ஏ.,வாகவும் இருந்திருக்கிறார்.
அம்பரீஷ் கடந்த 1998-99, 99-2004 மற்றும் 2004-2009 ஆண்டுகளில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 2006-2008 ம் காலகட்டத்தில் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார். அப்போது எழுப்பப்பட்ட காவிரி நதி பிரச்னைக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
தன்னுடன் பல படங்களில் நடித்த நடிகை சுமலதாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபிஷேக் என்ற மகன் உள்ளார். மாநில விருதுகள், பிலிம்பேர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
அம்பரீஷின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏராளமானபேர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.