ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'சர்கார்' படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. 'தெறி' 'மெர்சல்' படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம் இது.
வழக்கம்போல் இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தற்போதைக்கு 'தளபதி 63' என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்துக்கு ஆளப்போறபன் தமிழன் எனற பெயர் சூட்டப்பட இருப்பதாக தகவல் அடிபடுகிறது.
125 கோடி பட்ஜெட்டில் ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்த வருடம் (2019) தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக 'கீதா கோவிந்தம்' தெலுங்குப் படத்தில் நடித்த ராஷ்மிகா மடன்னா தான் 'தளபதி 63' படத்தின் ஹீரோயின் என தகவல் பரவிவருகிறது.
விஜய் ஓகே சொன்னால் அவரையே தளபதி 63 படத்தில், கதாநாயகியாக புக் பண்ண முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆக விஜய்க்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டாவின் ஹீரோயின் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.