Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி மரணம்!

M.S.Vishwanathan wife passess away
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி ஜானகி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். அவருக்கு வயது, 73. பழம்பெரும் இசையமைப்பாளர், எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி, ஜானகி, இரண்டரை ஆண்டுகளாக, கிட்னி பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த இவரது உடல்நிலை, இரண்டு மாதங்களுக்கு முன், மிகவும் பாதிக்கப்பட்டதால், சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில், சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கணவர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் குடும்பத்தினர், அருகிலிருந்து கவனித்துக் கொண்டனர். இசையமைப்பாளர் இளையராஜா உட்பட பல இசையமைப்பாளர்கள், மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து சென்றனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை, 4.10 மணிக்கு, ஜானகி இறந்தார். இவரது உடல் சென்னை சாந்தோமில் உள்ள வீட்டிற்கு, நேற்று மாலை, 6 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது. இவரது உடலுக்கு, தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. திரையுலக முக்கியதஸ்கள் பலரும், மலர் அஞ்சலி செலுத்தினர். ஜானகிக்கு, நான்கு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இறுதிச் சடங்கு, இன்று, மதியம் 12 மணிக்கு, பெசன்ட் நகர் சுடுகாட்டில் நடக்கிறது. எம்.எஸ்.விஸ்வநாதன் - ஜானகி தம்பதிக்கு, நான்கு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர்.

Tags »
M.S.Vishwanathan, wife janaki, passess away, எம்.எஸ்.விஸ்வநாதன், மனைவி ஜானகி, மரணம்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

பிச்சைமுத்து - Bombay,இந்தியா
2012-05-16 16:25:20 Report Abuse
 பிச்சைமுத்து இசை மன்னன் எம் எஸ் வி ஐயாவுக்கு எமது அனுதாபங்கள். ஐயாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஜானகி அம்மா இறைவனடி சேர பிரார்த்திக்கின்றோம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
balasubramani - bangalore,இந்தியா
2012-05-16 01:57:49 Report Abuse
 balasubramani எம் எஸ் வி ஐயா மனம் தளராமல் உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
டிகோ ரவி - kumbakonam,இந்தியா
2012-05-15 14:15:23 Report Abuse
 டிகோ ரவி   ராஜாவின் மனைவி போன கொஞ்ச நல்களில்யே மன்னரின் ராணி போனதும் இழப்புதான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் கோலிவுட் செய்திகள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in