ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் ஒரு தமிழ்ப் படப் பாடல் பரபரப்பை ஏற்படுத்தி பல கோடி பேரை முணுமுணுக்க வைத்ததென்றால், அந்தப் பெருமை 'ஒய் திஸ் கொலவெறி' பாடலையே சாரும்.
ஏழு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் அனிருத் இசையமைப்பில், தனுஷ், எழுதி பாடிய 3 படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் ஒரு மேக்கிங் வீடியோ போன்று யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது.
வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகப் பரவியது. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் உள்ள இசை ரசிகர்களையும் இந்தப் பாடல் ஈர்த்தது. தமிழ் மொழி தெரியாதவர்கள் கூட அந்தப் பாடலின் இசையை மட்டும் வைத்துக் கொண்டு அவரவர் பாணியில் பல்வேறு வெர்ஷன்களை வெளியிட்டனர்.
இன்று வரை 16 கோடியே 78 லட்சம் பார்வைகளைக் கடந்து யு டியுபில் தமிழ்ப் படப் பாடல்களில் முதலிடத்தை இந்தப் பாடல் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த ஏழு வருடங்களில் இந்தப் பாடலை மிஞ்ச வேறு ஒரு பாடல் வரவில்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.