ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிருத்விராஜை வைத்து மலையாளத்தில் 'என்னு நிண்டே மொய்தீன்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர் இயக்குனர் ஆர்.எஸ்.விமல். இவர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள பிரமாண்டமான புராணப்படம் தான் 'மஹாவீர் கர்ணா'. மகாபாரத பின்னணியில் உருவாகவுள்ள இந்தப்படத்தில் கர்ணனாக விக்ரம் நடிக்கிறார்.
சுமார் 3௦௦ கோடி பட்ஜெட்டில் தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் இந்தப்படம் உருவாக இருக்கிறது. பின்னர் இந்தப்படத்தை மொத்தம் 32 மொழிகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம். இந்தப்படத்தில் இளம் வயது கர்ணன் கதாபாத்திரம் ஒன்றும் இடம்பெறுகிறது. அதில் நடிப்பதற்கு விக்ரம்போல சாயல் கொண்ட டீனேஜ் பையனை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறதாம்.