ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்து உருவாக்கப்பட்ட படம் 'இந்தியன்'. பிரமாதமாக ஓடிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. செட் அமைப்பதற்கான பூஜைகள் போடப்பட்டு, படப்பிடிப்பை துவங்குவதற்கான ஏற்பாடுகளில் தயாரிப்புக் குழு வேகமாக ஈடுபட்டுள்ளது.
சென்னையில், மிகப் பிரம்மாண்டமான அரங்கு ஒன்றை வடிவமைத்து, முதல் கட்டமாக அங்கு சூட்டிங் நடத்த, அரங்கு அமைத்து வருகின்றனர். பிரபல கலை நிபுணரான முத்துராஜ் அந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறார். ஏற்கனவே, ஷங்கரின் இயக்கத்தில் உருவான 'ஐ', '2.0' போன்ற படங்களில் பணியாற்றிய முத்துராஜே, இந்தப் படத்திலும் பணியாற்றுகிறார்.
இந்தியன் தாத்தா வேடத்தில் நடிகர் கமல் நடிக்கவிருக்கும் காட்சிகளை உக்ரைன், போலந்து ஆகிய நாடுகளில் படமாக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.