சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
'பாகுபலி' நாயகி அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. திருமணத்திற்காக தன் உடல் எடையைக் குறைக்க அவர் ஆஸ்திரியா நாட்டில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்றும் பேச்சு எழுந்தது.
அனுஷ்காவின் திருமணம் பிப்ரவரி 19ம் தேதி நடக்கும் என்றும் கூட செய்திகள் வெளியானது. வேறு புதிய படங்களில் நடிக்க அனுஷ்கா எந்த ஒப்பந்தமும் போடாததால் அந்தத் திருமணச் செய்தி உண்மையாக இருக்கும் என்றுதான் பலரும் நினைத்தார்கள்.
இதனிடையே, இந்த திருமணச் செய்திகளுக்கு அனுஷ்காவின் மேனேஜர் மறுப்பு தெரிவித்துள்ளார். உடல் எடையைக் குறைத்த பின்பு அனுஷ்கா புதிய படங்களில் நடிக்க சம்மதிக்கலாம் என்றும் தெரிகிறது.
அனுஷ்காவையும், பாகுபலி நாயகன் பிரபாஸையும் இணைத்து ஏற்கெனவே பல காதல் வதந்திகள் வெளிவந்தன. அது போலவே இப்போது திருமணச் செய்தியும் வதந்தியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.