Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பணத்திற்காக ஐந்தாண்டு வாழ்க்கையை அடகு வைக்காதீர்கள் : கமல்

10 நவ, 2018 - 18:03 IST
எழுத்தின் அளவு:
Kamal-speech-at-Arur

நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், அரூரில் மக்கள் மத்தியில் பேசியதாவது : இங்கு கூடியிருக்கும் இளைஞர் கூட்டம், இதுவரை நடந்த, நடக்கின்ற ஆட்சிகள் மீது பெரும் கோபத்திலும், ஏமாற்றத்தையும் கொண்டுள்ளனர். அவர்கள் ஆட்சி மாற்றம் வேண்டுகிறார்கள், அதனை மக்கள் தான் ஏற்படுத்த வேண்டும்.

இங்கு நான் வந்திருப்பது உங்களிடம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக ஓட்டு பேரம் பேச வரவில்லை, இலவசங்களை தருவேன் என்று வாக்குறுதி தர வரவில்லை. மக்களுக்குத் தேவையானவற்றை மக்களே பெற்றுக் கொள்ளும் வகையில் அரசு அமைந்திட எங்கள் கட்சி உழைத்திடும்.

ஓட்டிற்காக ஒரு நாள் பணத்தை பெற்றுக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கையை அடகு வைத்து விடாதீர்கள். சில ஆயிரம் ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு உங்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணத்தை விற்று விடாதீர்கள்.

மக்களின் முழு அதிகாரத்தையும் மக்களிடமே கொடுக்கும் கிராம சபைகளில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள். இளைஞர்கள் தைரியமாக உங்கள் எதிர்காலத்திற்காக குரல் கொடுக்க தயாராகி விட்டீர்கள் என்றால் நாளை நமதே.

இவ்வாறு கமல் பேசினார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
சங்கம், விதிமுறையெல்லாம் எதற்கு ? : நகுல் ஆதங்கம்சங்கம், விதிமுறையெல்லாம் எதற்கு ? : ... 16ந் தேதி 4 சிறுபட்ஜெட் படங்கள் மட்டுமே வெளிவரும்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு 16ந் தேதி 4 சிறுபட்ஜெட் படங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

PERIYASAMYMANIMARANVK MANIMARANVK - keeranur,இந்தியா
14 நவ, 2018 - 05:27 Report Abuse
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK எல்லோருக்கும் வேலை. நாட்டில் யாரும் பிச்சை எடுக்க கூடாது. முடிந்தவர்களுக்கு வேலை முடியாதவர்களுக்கு இருக்க இருப்பிடம், உண்ண உணவு யார் தருகிறார்களோ அவர்கள் தான் வரவேண்டும். மேலும் இலவச கல்வி, இலவச மருத்துவம் இவை இருந்தால் ஒட்டு போடலாம்.
Rate this:
saravan - bangaloru,இந்தியா
11 நவ, 2018 - 11:44 Report Abuse
saravan பொய்யர்
Rate this:
saravan - bangaloru,இந்தியா
11 நவ, 2018 - 11:42 Report Abuse
saravan இவரிடம் ஏமாந்த நடிகைகள் போல் நாம ஏமாறக்கூடாது
Rate this:
Natrajan Natarajan - Rasipuram,இந்தியா
11 நவ, 2018 - 10:56 Report Abuse
Natrajan Natarajan பணம் இருந்தால் அனைத்தும் செய்யலாம் என்ற கோணத்தில் அ.தி.மு.க அரசு செயல்பட்டு பணம் இப்பொழுதே கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஊர்கிளைச் செயலாளர் மூலமாக. இந்த வேலையை அ.தி.மு.க மந்திரியே மேடையிலேயே மாவட்ட ஆட்சியாளர் முன்னிலையில். இதை என்னவென்று சொல்வது. அரசு ஊழியரும் இந்த செயலுக்கு உடந்தை என்பது வெளிச்சமாகிறது.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
11 நவ, 2018 - 10:54 Report Abuse
Malick Raja அப்ப்பூ ... இதெல்லாம் புதுமையா தெரியாது .. ஏற்கனவே திமுக அதிமுக வட்டம் மாவட்டம் என ஆட்டையை போட்டுக்கொண்டது போறாது என இனி மைய்ய நீதி மாவட்ட வட்டங்களை பணம்போட்டு வளக்கவேண்டுமோ ..போதும் திமுக ,அதிமுக ,காங்கிரஸ் ,தேமுதிக, பாமக ,விசிக ,மமக ,தமுமுக ,மஜக, ததேவிமுக, உமுக ,தொமுக ,பாரிவேந்தர்கட்சி ,கோயமுத்துரில் 2.கட்சி , பாமக கிளைக்கட்சி . பாஜக என இவ்வளோ எழவுக்கட்சிகள் போதாதுன்னு மையம் இனி ரஜினி ,விஜய் ,விவேக் ,வடிவேலு என கட்சிகள் வந்தால் அப்புறம் பொதுவானவர்களே இருக்கவே முடியாது. தேமுதிக பாமக கடை மூடும் தருவாயில் இருக்கிறது ..பிஜேபி தமிழகத்தில் கடையை மூடி ஆண்டுகள் பலவாகி காவல் புரிய தலைவர்கள் ஐந்தாறுபேர் இருக்கிறார்கள் ..அப்புறம் இன்னாத்துக்கு மக்கள் நீதிமயம் .. இன்னாபா கடையை மூடலாமா ?
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in