மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
76 வயதாகும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் இப்போது வரை சினிமா, விளம்பர படங்கள் என்று பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் வக்கில் உடையணிந்து நடித்துள்ள விளம்பரம் படம் சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அனுமதி பெறாமல் அவர் வக்கில் உடையணிந்து நடித்ததால் அதற்கு வக்கில்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதையடுத்து, உரிய அனுமதி பெறாமல் வக்கில் உடையணிந்து நடித்ததற்கு அமிதாப்பச்சன் மற்றும் அந்த விளம்பர படத்தை தயாரித்த நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விளம்பரத்தை ஒளிபரப்புவதை 10 நாட்களில் நிறுத்த வேண்டும். இல்லையேல் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.