Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிராபிக்சில் மிரட்ட வைக்கும் 2.0 டிரைலர் - ஓர் பார்வை

03 நவ, 2018 - 13:47 IST
எழுத்தின் அளவு:
How-is-2point0-Trailer

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 படத்தின் டிரைலர் சற்று முன் யு டியூபில் வெளியிடப்பட்டது.

2.0 டிரைலர் சரியாக 2.01 நிமிடம் உள்ளது. டிரைலர் முழுவதுமே அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகள், விஎப்எக்ஸ் காட்சிகள் என பிரமிக்க வைக்கும் அளவிற்கு, பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

இது தமிழ்ப் படமல்ல, இந்தியப் படம், ஏன் ஹாலிவுட் படம் என டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது போலவே நிச்சயமாக ஹாலிவுட் தரத்திற்கு படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை டிரைலர் ஏற்படுத்துகிறது.

டீசரின் நீட்சியாக இந்த டிரைலர் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். டீசரில் இடம் பெற்ற செல்போன்கள் திடீர் மாயம், மக்கள் பீதி என்ற வசனத்துடன் டிரைலரும் ஆரம்பமாகிறது. அந்த வசனம் வரும் 25 வினாடிகள் வரை டிரைலர் வேகமெடுக்காமல் மிகவும் மெதுவாக நகர்வது போன்ற உணர்வே ஏற்படுகிறது. அந்தக் காட்சிகளை இன்னும் பரபரப்பாக எடிட் செய்திருக்கலாம்.

அதன் பின் பறவை போன்ற தோற்றத்தில் இருக்கும் அக்ஷய் குமார் தமிழில் வசனம் பேசி மிரள வைக்கிறார். அடுத்து எந்திரன் சிட்டியை ரீலோட் செய்யும் காட்சியும், தான் வெர்ஷன் 2.0 ரிலோட்ட் என சிட்டி ரஜினிகாந்த் பேசும் வசனமும் வருகிறது. அதன் பின் டிரைலர் முடியும் வரை கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே டிரைலரில் இடம் பெறுகிறது.

டிரைலர் முடிந்த பின் கடைசி காட்சியாக ரஜினிகாந்த் கதாபாத்திரத் தோற்றம், அக்ஷய்குமாரின் கதாபாத்திரத் தோற்றமாக மாறுவதுதான் டிரைலரின் ஹைலைட். அது சிட்டி ரஜினிகாந்த்தா அல்லது, வசீகரன் ரஜினிகாந்தா என்பது கேள்வி.

டீசர், டிரைலர் இரண்டிலுமே சிட்டியை மட்டுமே காட்டுகிறார்கள். சிட்டியை உருவாக்கிய வசீகரன், ஓரிரு காட்சிகளில் மட்டுமே வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் ரிலீஸ் ஆகியுள்ள இந்த டிரைலர் புதிய சாதனையைப் படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் : ரஜினிலேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் : ... 2.0 மேக்கப் - என் வாழ்நாள் சாதனை : அக்சய் குமார் 2.0 மேக்கப் - என் வாழ்நாள் சாதனை : அக்சய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

vasanthan - Moscow,ரஷ்யா
04 நவ, 2018 - 09:37 Report Abuse
vasanthan 3 D யில் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள் . சும்மா அள்ளுது . ஒரு தமிழ் படம் இவளவு பிரமாதமாக இதைவிட ப்ரும்மாண்டமாக எடுக்க முடியாது.
Rate this:
arun veli - chennai,இந்தியா
04 நவ, 2018 - 08:55 Report Abuse
arun veli கிராபிக்ஸ் இருக்கு....மிரட்டல் எங்க இருக்கு...? போங்க officer ...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04 நவ, 2018 - 01:37 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அவ்வ்வ்... கோச்சடையான் 2.0...
Rate this:
03 நவ, 2018 - 21:23 Report Abuse
bugindia sorry rajini sir!! pavam ungalai ippadi kastapadthirkka koodadhu indha 2.0. ootthikicchhu...2.o. 😆🤣😀👩‍💻👨‍💻🖕
Rate this:
Rajamani Rajendran - THENI,இந்தியா
03 நவ, 2018 - 17:23 Report Abuse
Rajamani Rajendran வௌ ரேலி super
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in