ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் ரஜினி பேசியதாவது : எனக்கு தாய், தந்தை என எல்லாமுமாக இருக்கும் அண்ணன் சத்ய நாராயணனுக்கு நன்றி.
ஷங்கர் இந்த கதையை சொன்னபோது நான் பண்ண முடியுமா என்று கேட்கவில்லை. யார் தயாரிக்க போகிறார்கள் என்று கேட்டேன். சுபாஷ்கரன் பற்றி சொன்னார். 300 கோடியில் ஆரம்பித்தோம் 550 கோடிக்கு வந்துள்ளது. நிச்சயம் பட்ஜெட்டை விட படம் இரண்டு மடங்கு அதிகம் வசூலிக்கும்.
2.0 படத்தில் நடித்த போது உடல்நிலை சரியில்லாமல் போனது. என்னால் படப்பிடிப்பில் சரியாக நடிக்க முடியவில்லை. 14 முதல் 18 கிலோ வரையிலான எடையை மேக்கப் போட்ட போது உடல் ஒத்துழைக்கவில்லை. ஒவ்வொரு காட்சிக்கும் 7 டேக், 8 டேக் என்று சொன்னது. படத்தில் என்னால் தொடர முடியாது என்று கருதி இப்படத்தை விட்டு விலகலாம் என்று எண்ணினேன்.
என்னை விட்டுருங்க. இதுவரை ஆன செலவை கொடுத்துவிடுகிறேன் என ஷங்கரிடம் சொன்னேன். ஷங்கரும், தயாரிப்பாளரும் முதலில் உங்கள் உடல்நிலையை பாருங்கள். உடல்நிலை சரியான பின்னர் படப்பிடிப்பை தொடரலாம் என்றனர். இந்த படத்திற்காக 4 வருடங்கள் கூட எடுத்துக் கூட எடுத்துக் கொள்ளுங்கள் என்று சுபாஷ்கரன் கூறினார். அப்போது தான் உண்மையில் நல்ல நண்பர்களை சம்பாதித்து இருக்கிறேன் என உணர்ந்தேன். நல்ல நண்பர் கிடைப்பது ஒரு ஹோகினூர் வைரம் போன்றது
ஷங்கர், இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன், ஸ்பீல்பர்க். 2.0 படத்தை உலகளவில் கொண்டு சென்றுள்ளார். ஷங்கர் இன்னும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும். அடுத்தப்படியாக எனது நண்பர் கமல் நடிக்கும் இந்தியன்-2 எடுக்கிறார். இப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும். லேட்டானாலும் கரெக்ட்டாக வரணும். வந்தா உறுதியாக அடிக்கணும். நானும் படத்தை சொன்னேன். நிச்சயம் படம் சூப்பர் ஹிட்டாகும் என்றார்.