ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை இப்படி ஒரு வெளியீடும், திரையிடலும் இதற்கு முன் இருந்திருக்குமா என்று வியக்கும் அளவிற்கு 'சர்கார்' படத்திற்காக பெரிய அளவில் திட்டமிட்டுள்ளார்களாம். உலகம் முழுவதும் சுமார் 3000க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட உள்ளது.
தமிழ்நாடு, கேரளா, இலங்கை, அமெரிக்கா என பல இடங்களில் அதிகமான காட்சிகளைத் திரையிட முடிவு செய்துள்ளார்களாம். இதுவரை ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படங்களுக்குக் கூட அப்படி ஒரு திரையிடல் இருந்ததில்லை என்கிறார்கள். போட்டிக்கு வேறு எந்த படங்களும் இல்லாததால் பல தியேட்டர்காரர்களும் 'சர்கார்' படத்தைத் திரையிட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பாரிசின் புகழ் பெற்ற லீ கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் நவம்பர் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு 'சர்கார்' படம் திரையிடப்பட உள்ளது. அதற்கான முன்பதிவையும் இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்.
தீபாவளிக்கு இன்னும் 5 நாட்கள் இருப்பதால் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. 'சர்கார்' படத்தின் முதல் நாள் வசூல் 50 கோடியைத் தொட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.