ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனி ஒருவனைத் தொடர்ந்து ஜெயம்ரவி போலீசாக நடித்துள்ள படம் அடங்கமறு. கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடக்கும் நிலையில், டிரைலர் வெளியாகி உள்ளது.
முன்னதாக, இப்படத்தில் மாணவர்களுடன் இணைந்து ஜெயம்ரவி பாடும் ஒரு பாடல், அவரது பிறந்த நாளில் வெளியிடப்பட்டிருந்தது. ரஜினியின் காலா படத்தில் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் லோகன் எழுதியிருக்கிறார்.
அடங்கமறு பாடல் குறித்து லோகன் கூறும்போது, இந்த படத்தில் போலீசாக நடிக்கும் ஜெயம் ரவிக்கும், மாணவர்களுக்குமிடையே "ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு"-என்று தொடங்கும் ஒரு பாடல் உள்ளது. அந்தப்பாடல் போலீஸ் உங்கள் நண்பன் என்பதை மாணவர்களிடம் ஜெயம்ரவி சொல்வது போன்ற சூழலில் அமைந்திருக்கிறது. இந்தப்படம் தவிர நாடோடிகள்-2, கொரில்லா உள்பட பத்து படங்களுக்கு மேல் தற்போது பாடல்கள் எழுதி வருவதாக சொல்கிறார்.