ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல பின்னணி இசை பாடகி பி.சுசீலா. வட இந்தியாவுக்கு லதா மங்கேஷ்கர் என்றால் தென்னிந்தியாவுக்கு பி.சுசீலா. 1952ம் ஆண்டு முதல் தனது இசை பயணத்தை தொடங்கி 65 ஆண்டுகளை தாண்டியும் இன்னும் பாடிக் கொண்டிருக்கிறார். 40 ஆயிரம் பாடல்களை பாடி முடித்துள்ள பி.சுசீலா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். பத்மபூஷன் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.
இத்தகைய சிறப்புகளை கொண்ட பி.சுசீலாவை கவுரவிக்கும் வகையில் வருகிற 28ந் தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இசையரசி என்ற தலைப்பில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் பி.சுசீலாவின் பிரபலமான பாடல்களை முன்னணி இசை கலைஞர்கள் பாடுகிறார்கள். பல திரையுலக பிரமுகர்கள், பாடகர், பாடகிகள், இசை அமைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவின் ஹெலைட்டாக பி.சுசீலாவும் சில பாடல்களை பாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை சாதகப் பறவைகள் இசைக்குழு செய்து வருகிறது.