ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய், அஜித் ஆகியோர் நடித்து வெளிவரும் படங்களின் போஸ்டர், டீசர், டிரைலர் எது வந்தாலுமே சமூக வலைத்தளங்களில் 'டிரோல்' செய்யப்படுகிறது. அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் முதல் பார்வை வெளிவந்த போது, அதில் நரைத்த தலைமுடியுடன் ஒரு அஜித், கருப்பு தலைமுடியுடன் ஒரு அஜித் இடம் பெற்றது அதிகமாகவே 'டிரோல்' செய்யப்பட்டது.
நேற்று 'விஸ்வாசம்' படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது. அதில் 'டிரோல்' செய்வதற்கு என்ன கிடைக்கும் என ரசிகர்கள் தேடிப் பார்த்து அதில் உள்ள பெரிய தவறைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அனேகமாக, இந்த போஸ்டரை டிசைன் செய்தவரை இந்நேரம் வேலையை விட்டு தூக்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
புல்லட்டை கை விட்டு ஓட்டிக் கொண்டு வரும் அஜித்தின் பின்னாடி சில இளைஞர்கள் துண்டை வீசிக் கொண்டு ஓடி வருவது போன்ற புகைப்படங்கள் போஸ்டரில் உள்ளன. அதில் ஊதா கலர் சட்டை போட்டு ஓடி வரும் ஒரு இளைஞரை கொஞ்சம் கலர் மாற்றி இரண்டு முறை மீண்டும் 'காப்பி, பேஸ்ட்' செய்திருக்கிறார்கள்.
பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் படத்தில் ஒரு போஸ்டரில் இப்படியா காப்பி பேஸ்ட் செய்வது என ரசிகர்கள் நன்றாகவே 'டிரோல்' செய்து வருகிறார்கள்.