ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகிறது.
விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சர்கார் படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 200 கோடிக்கு பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சர்கார் படத்தின் டீஸர் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. விஜய் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சர்கார் படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சியின் சில ஷாட்களும் டீஸரில் இடம்பெற்றுள்ளன. அதில் வில்லனின் ஆளை அடித்து தன்னுடைய தோளில் போட்டுக்கொண்டு விஜய் நிற்பதுபோல் ஒரு ஷாட் இடம்பெற்றுள்ளது.
அச்சு அசலாக இதே ஷாட் அல்லு அர்ஜூன் நடித்து 2017ல் வெளியான டிஜே என்கிற துவ்வாட ஜெகன்னாதம் என்ற தெலுங்குப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அதை அப்படியே காப்பியடித்து சர்கார் படத்தின் சண்டைக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் சர்கார் படத்தில் சண்டைக்காட்சி கூட ஒரிஜினல் இல்லையா?