Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் கவுரவ்

20 அக், 2018 - 19:45 IST
எழுத்தின் அளவு:
Gaurav-narayanan-about-Sabarimalai-issue

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்ததிலிருந்து பல பிரச்னைகள் உருவாகி வருகின்றன. தற்போது சபரிமலையில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் 99 சதவீத பெண்கள் செல்ல மறுக்கின்றன வேளையில் பெண்ணியவாதிகள் என்று கூறும் சில பெண்கள் நுழைய முயற்சித்து வருகின்றனர். இதனால் சபரிமலை, கலவர பூமியாக மாறியிருக்கிறது.

இதுப்பற்றி தூங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் படங்களின் இயக்குநர் கவுரவ் நாராயணன், தனது ஆதங்கத்தை வீடியோ வாயிலாக தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது : சபரிமலை விவகாரம் மனதிற்கு வேதனை அளிக்கிறது. புனித ஸ்தலம், ஐதீகமான ஸ்தலம், சாமி கும்பிட நிம்மதியாக சென்று வரக்கூடிய ஸ்தலத்தில் போலீஸ் தடியடி, கல்வீச்சு நடப்பதாக நன்றாகவாக இருக்கிறது

எந்த ஒரு மதமாக இருந்தாலும் அடுத்தவர்களின் மனதை கஷ்டப்படுத்தாமல் இருந்தால் தான் கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பார், கஷ்டப்படுத்தினால் ஏற்க மாட்டார். லட்சக்கணக்கானவர்களின் மனதை உடைத்து கோவிலில் நுழைந்து சாமி கும்பிடுவதால் அந்த சகோதரிகளுக்கு என்ன கிடைக்க போகிறது. சத்தியமாக தெரியவில்லை.

இப்போது சென்ற மூன்று பெண்களும் அவர்கள் சார்ந்த மதங்களின் இறைவழிபாட்டு தலங்களுக்குள் உள்ளே செல்ல முடியுமா. கோவில் என்பது சில சட்டத்திட்டங்கள் கடைபிடித்து வரப்படுகிறது. அதை சட்டத்தின் வாயிலாக, கோர்ட் வாயிலாக உடைப்போம் என்று சொல்வது நியாயம் கிடையாது.

சத்தியமாக இதற்கு பின்னாடி அரசியல் சக்தி உள்ளது. அவர்கள் சொல்ல நீங்கள் செய்கிறீர்கள். தயவு செய்து சபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள்.

இவ்வாறு கூறியுள்ளார்.




Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பார்வதி மீது அறிவிக்கப்படாத ரெட்கார்டு?பார்வதி மீது அறிவிக்கப்படாத ... 2.0 பாடல் வரிகள் வீடியோ : வரவேற்பு எப்படி? 2.0 பாடல் வரிகள் வீடியோ : வரவேற்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

21 அக், 2018 - 05:49 Report Abuse
natarajan vazhthukkal Bro. Finally a sane voice from Tamil Industry.
Rate this:
21 அக், 2018 - 13:19Report Abuse
பாரதன்.அந்தப் பெண்களை போலீஸ் கவசமெல்லாம் அணிவித்து மேலே போலீஸார் அழைத்துச் சென்றனர். அந்த ரேஹானா என்ற பெண் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். உச்சநீதிமன்றத்தில் முந்தைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் கொடுத்த பிரமாண வாக்குமூலத்தை மாற்றி, பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் எனப் புதிய பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்ததால் தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவேதான் கம்யூனிஸ்டு கட்சி அரசின் தூண்டுதலால் தான் இவ்வளவும் நடக்கிறது. இதற்கான விலையை கம்யூனிஸ்டு கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்தே தீரவேண்டும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Maari 2
    • மாரி 2
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
    • இயக்குனர் :பாலாஜி மோகன்
    Tamil New Film Dev
    • தேவ்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
    • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
    Tamil New Film Adangamaru
    • அடங்கமறு
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in