ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
படம் வெளியான உடனேயே அப்படத்தின் இயக்குநரை பாராட்டுவது, ட்விட்டரில் புகழ்வது சம்பிரதாயமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தப்பாராட்டில் பல நேரங்களில் போலித்தனம் தெரியும்.
ஒரு சிலர் தான் படத்தை பார்த்துவிட்டு ஆத்மார்த்தமாக உண்மையாக பாராட்டுகிறார்கள். இயக்குநர் வசந்தபாலன் இப்படிப்பட்டவர். கடந்த 4 ஆம் தேதி வெளியான 96 படத்தை நிதானமாக பார்த்துவிட்டு, தன் பாராட்டை முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
நேற்றுதான் 96 திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது நேர்ந்து விடக்கூடாதுன்னுதான் படத்தைப் பார்க்காமல் தள்ளிப்போட்டு வந்தேன். மெதுவாக என் பள்ளி நாட்கள். கூச்சமுள்ள பையனான என்னை விஜய் சேதுபதியாக பார்த்தேன். அவ்வளவு தான் கால்கள் தரையில் இல்லை. ஆழ்மனதியானத்தில் மூழ்கி விட்டேன். கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.
ஜானு, ராமை நெஞ்சில் தொடும் போது என் பிபி ஏறத் தொடங்கியது. நீ இன்னும் வெர்ஜினா என்று கேட்டபோது 34 வயது வரையான என் திருமணம் ஆகாத வாழ்வை எண்ணிக் கொண்டேன். இளையராஜாவின் பாடல்களை ஜானு பாடும் போது என் ஆன்மா எங்கோ கேவி கேவி அழத் தொடங்கிவிட்டது. எவ்வளவு மன நெருக்கடியில் இந்த மனசு தவித்தது. ஒரு ஆன்ம விடுதலை. மெய் மயக்கம்.
திரையில் என்னை நான் பார்த்தேன். பெண்ணைத் தொடுவதில் ஒரு மயக்கம் உள்ளது, ஆனால் பெண்ணை தொடாமல் நாக்குக்கடியில் மனதின் மர்மப்பிரதேசத்தில் அந்த நினைவுகளை உருட்டிக்கொண்டு இருப்பதில் உள்ள மகிழ்ச்சி பேரானந்தம்.. விளக்க முடியா உணர்வு... அது தான் பெரு மயக்கம்.
திரையில் படம் முடிந்த போது நான் என் 92 களில் பயணிக்கத் தொடங்கிவிட்டேன். என்று தொடங்கி நீண்ட பதிவாக 96 படத்தை பாராட்டித்தள்ளி இருக்கிறார் வசந்தபாலன்.
இவரது பாராட்டில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் நிஜம். 96 படத்துக்குக் கிடைத்த கௌரவமான பாராட்டும் கூட.