ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிப்பாக நடைபெற்று வருகின்றன. தீபாவளி விடுமுறைக்கு ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ராதாரவி, பழ.கருப்பையா வில்லன்களாக நடிக்க, பழ கருப்பையாவின் மகளாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். அக்டோபர் 19 அன்று மாலை 6 மணிக்கு 'சர்கார்' படத்தின் டீஸர் வெளியானது.
இந்த டீஸருக்காகவே காத்திருந்த விஜய் ரசிகர்கள் யூடியூபை தெறிக்கவிட்டனர். டீஸர் வெளியான 10 நிமிடங்களிலேயே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சர்கார் டீஸரை பார்த்தனர். 20 நிமிடங்களில் 20 லட்சம் பேர், 35 நிமிடங்களில் 30 லட்சம் பேர், 55 நிமிடங்களில் 40 லட்சம் பேர், 75 நிமிடங்களில் 50 லட்சம் பேர் என அதிகமான மக்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
விஜய்யின் 'சர்கார்' டீஸர் 17 மணி நேரத்தில் 1 கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. 10 லட்சம் லைக்குகள், 98 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களின் கருத்துகள் என்று சர்கார் சாதனை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்கார் டீஸரை பார்த்து ரசித்த 1 கோடியே 25 லட்சம் மக்களும் சர்கார் படத்தைப் பார்த்தால் படம் வெற்றியடையும். அது சாத்தியமா.?