ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2018ம் ஆண்டு தீபாவளிக்கு தற்போது வரை 'சர்கார், திமிரு புடிச்சவன், பில்லா பாண்டி, களவாணி மாப்பிள்ளை' ஆகிய படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 'சர்கார்' படத்தை மிகப் பிரம்மாண்டமான அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். விஜய் நடித்த படங்களிலேயே வெளிவந்த 'மெர்சல்' படம்தான் மிகப் பெரும் அளவில் வெளியிடப்பட்டது. இப்போது அதை மிஞ்சும் அளவிற்கு 'சர்கார்' படத்தை வெளியிடப் போகிறார்களாம்.
தமிழ்நாடு, கேரளா மட்டுமல்லாது பிற மாநிலங்கள், அமெரிக்கா என உலக அளவிலும் 'சர்கார்' வெளியீடு அதிக தியேட்டர்களில் இருக்கும் என்கிறார்கள். இப்படத்தின் தெலுங்கு உரிமை, கேரளா உரிமை இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவிற்கு விற்கப்பட்டுள்ளது. ஹிந்தி சாட்டிலைட் உரிமை கூட 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
படத்தை தெலுங்கில் 'சர்கார்' என்ற பெயரிலேயே டப்பிங் செய்து தமிழில் வெளியாகும் அதே தினத்தில்தான் வெளியிடப் போகிறார்களாம். பொதுவாக ரஜினிகாந்த் நடித்த படங்கள்தான் தமிழ்ப் படங்களின் திரையிடலில் சாதனை வெளியீடாக இருக்கும். இந்த முறை அது 'சர்கார்' படம் மூலம் முறியடிக்கப்படும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.