ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல இயக்குனரான மகேந்திரன் விஜய் நடித்த 'தெறி' படம் மூலமாக ஒரு நடிகராகவும் மாறி தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இந்தநிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 'பேட்ட' படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
எழுபதுகளில் ரஜினியிடம் ஒளிந்துகொண்டிருந்த நடிப்புத் திறமையை முள்ளும் மலரும், ஜானி என தனது படங்களின் மூலம் வெளிக்கொண்டுவந்தவர் தான் இயக்குனர் மகேந்திரன். ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வை நடத்தியபோது அதில் இயக்குனர் முத்துராமனுடன் இயக்குனர் மகேந்திரனையும் தன் அருகில் அமரவைத்தார் ரஜினி.
அந்த அளவுக்கு ரஜினியின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபரான இயக்குனர் மகேந்திரன், ரஜினியின் நடிப்பை வெளிக்கொண்டு வந்த அந்த மகேந்திரன் சரியாக நாற்பது வருடங்கள் கழிந்த நிலையில் இப்போது ரஜினியுடனேயே நடிப்பது ஆச்சர்யமான விஷயம் தான்..