ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். குறுகிய காலம் வாழ்ந்து அரிய பல திரைப்பாடல்களை, தத்துவ பாடலாக தந்தவர். அவரது நினைவு நாள் இன்று. அவரை பற்றி ஒரு மலரும் நினைவு...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப் படுத்தான்காடு என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் 1930ம் ஆண்டு பிறந்தார்.
சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு வரை படித்தார். விவசாயம் மட்டுமின்றி, உப்பளம், மாம்பழ வியாபாரம், இட்லி கடை என 10-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.
சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். கருத்துச் செறிவும், கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை 'ஜனசக்தி' பத்திரிகை வெளியிட்டுவந்தது. விவசாய சங்கம், பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய 'குயில்' இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
'படித்த பெண்' திரைப்படத்துக்காக 1955-ல் முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தார்.
180 திரைப்படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால், அவை அனைத்துமே காலத்தால் அழியாதவையாகத் திகழ்கின்றன. எம்ஜிஆர் நடித்த 7 படங்கள், சிவாஜி கணேசனின் 11 படங்கள் இதில் அடங்கும். 'சின்னப் பயலே சின்னப் பயலே', 'தூங்காதே தம்பி தூங்காதே', 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே', 'எல்லோரும் இந்நாட்டு மன்னரே', 'செய்யும் தொழிலே தெய்வம்' ஆகியவை குறிப்பிடத்தக்க பாடல்கள்.
மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
1959ம் ஆண்டு தனது 29 வயதில் மறைந்தார். ஒரு தவறான அறுவை சிகிக்சை அவரது உயிரை பறித்துக் கொண்டது.