Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாவையே உலுக்க வரும் வழக்கு ‌எண் 18/9...!

03 மே, 2012 - 10:23 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவை உலுக்கும் விதமான படங்கள் எப்போதாவது தான் வரும். அப்படியொரு படம் மே 4ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அது தான் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9. பொதுவாக பாலாஜி சக்திவேல் படங்கள் என்றாலே மனதை உருக்கி, உயிரை தொலைத்து, தூக்கம் இல்லாமல் நம்மை தொலைத்து எடுக்கும். அப்படியொரு தரமான படத்தை தான் அவர் கொடுப்பார் அதற்கு அவரது முந்தைய படங்களான காதல் மற்றும் கல்லூரி படங்களே சாட்சி. ஆனால் இப்போது வெளியாக இருக்கும் வழக்கு எண் 18/9 படம் செய்திதாளில் வந்த ஒரு உண்மை  சம்பவத்தை படமாக்கி நம்மை எல்லோரையும் கண்ணீர் விட்டு கதறி அழ வைக்கும் அளவுக்கு எடுத்திருக்கிறாராம். முற்றிலும் புதுமுகங்க‌ளை வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ காட்சியை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள் முதல் நடிகர், நடிகையர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வரை  திரையிட்டு காண்பித்து இருக்கிறார் டைரக்டர் பாலாஜி சக்திவேல். படத்தை பார்த்த அத்தனை பத்திரிக்கையாளர்களும், சினிமா பிரபலங்களும் ஆடிப்போய் விட்டார்கள். சிலர் கண்ணீர் விட்டு கதறி அழுதே விட்டார்களாம். படம் பார்த்து வந்த அத்தனைபேரும் இது நிஜக்கதையா, எங்க புடிச்சிங்க அந்த பசங்களை என்ற ஏராளமான கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த பாலாஜி சக்திவேல், என் அசிஸ்டென்ட் டைரக்டர்களோட உழைப்பும் ஒத்துழைப்பும் இல்லேன்னா என்னால இப்படியொரு படத்தை கொடுத்திருக்க முடியாது என்று பெருந்த‌ன்மையாக கூறினாராம்.

படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி கூறுகையில், இதுவரை நான் எடுத்த, தயாரித்தது எல்லாம் படங்களே கிடையாது. வழக்கு எண் 18/9 தான் உண்மையான படம். இப்படத்திற்கு தயாரிப்பாளராக இருந்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

திலிப் - chennai,இந்தியா
05 மே, 2012 - 05:41 Report Abuse
 திலிப் அப்ப டீ.வீ.டி எப்ப வரும்? சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா.
Rate this:
குமரேசன் - Chennai,இந்தியா
04 மே, 2012 - 14:47 Report Abuse
 குமரேசன் இது உண்மை. நெஞ்சை உலுக்கும் படம் தான். I liked this movie வெரி மச்.
Rate this:
bala - Chennai  ( Posted via: Dinamalar Android App )
04 மே, 2012 - 13:39 Report Abuse
bala நாராயணா நாராயணா
Rate this:
senthil - chennai,இந்தியா
03 மே, 2012 - 16:59 Report Abuse
 senthil இப்பிடி ஆளாளுக்கு ஒரு முறை பார்த்தாலே படம் ஹிட் ஆயிடும்
Rate this:
ஜெயக்குமார் - srivi,இந்தியா
03 மே, 2012 - 14:17 Report Abuse
 ஜெயக்குமார் இது பொய் வழக்கா என்பது நாளை தெரிந்து விடும்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in