‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
விஜய் தேவரகொண்டா, மெஹ்ரின், நாசர் நடித்துள்ள நோட்டா படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி உள்ளார். ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார், சாம்.சி.எஸ் இசை. படம் நாளை வெளிவருகிறது. இந்தப் படத்தின் பின்னணிக்கு சிம்பொனி இசை கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ் கூறியதாவது:
பல ஆண்டுகளாக நான் ஒரு விஷயத்தை செய்யும் கனவில் இருந்து வந்தேன். அது நோட்டா படத்தின் மூலம் நனவாகி இருக்கிறது. இந்த படத்துக்கு பிரம்மாண்ட ஆர்க்கெஸ்ட்ரா இசைக்கோர்ப்பு செய்யும் யோசனையை நான் கூறிய போது, எந்தவித மறுப்பும் சொல்லாமல் உடனடியாக தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார்.
படத்தில் இடம்பெறும் தி ரைஸ் ஆப் லீடர் என்ற பாடலின் சூழல் ஒரு ஆழ்ந்த, சக்தி வாய்ந்த இசையை கோரியது. மாசிடோனியா சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா இருந்தால் படத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தும் என்று உணர்ந்தேன். ஸ்ட்ரிங்ஸ் மற்றும் பிராஸ் இசைக்கலைஞர்கள் 150க்கும் மேற்பட்டோர் பின்னணி இசையில், குறிப்பாக இந்த பாடல் இசைக்கோர்ப்பில் பங்கு பெற்றனர்.
நோட்டாவின் பின்னணி இசை பிரமாண்டமாக இருக்கும். நான் சாதாரணமாக சொல்லவில்லை, படத்தில் உள்ள காட்சிகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன, அதனால் அவற்றிற்கு பொருத்தமான இசையை வழங்க, நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. என்றார்.