ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ஹன்சிகா, தன் உடல் எடையை கணிசமாக குறைத்து விட்டு, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். தன் திரையுலக மற்றும் எதிர்காலம் குறித்து ஹன்சிகா கூறியதாவது: தமிழில், தற்போது 100, துப்பாக்கி முனை, மகா படங்களில் நடித்து வருகிறேன். அனைத்துமே வித்தியாசமான கதாபாத்திரங்கள்.
நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே, 50 படங்களில் நடித்தது பிரமிப்பாக உள்ளது. தமிழில் நடிப்பதை பெரிதும் விரும்புகிறேன். தமிழ் கற்று வருகிறேன். நான்கு கிலோ மட்டுமே குறைத்தேன். சாப்பாட்டுக்கு கட்டுப்பாடு கிடையாது. விரும்பியதை சாப்பிடுவேன். யோகா செய்வேன்.
வருடத்திற்கு 8 படங்கள் நடித்து வந்தேன். இப்போது தேர்ந்தெடுத்து 4 படங்கள் மட்டுமே நடிக்கிறேன். அஜித் உடன் நடிக்காதது. வருத்தமளிக்கிறது. பெரிய நடிகர்களுடன் நடித்தபோது தான் சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே படத்தில் நடித்தேன். அப்போது நான் எடுத்தது சரியான முடிவு தான். ஹீரோ என்றால் கதை மட்டுமே, மற்ற எதையும் யோசிக்க மாட்டேன்.
மலையாளத்தில் வில்லன் படத்தில் நடித்தேன். மலையாளம் கஷ்டமானது. இப்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துறேன். 60, 70 வயதுக்கு பிறகு படம் தயாரிப்பு பற்றி யோசிப்பேன். எல்லாரும் அரசியல் ஆர்வம் பற்றி கேக்குறாங்க. அரசியல் தொடர்பான படிப்பு படித்திருக்கிறேன், ஆனால் இன்னும் அரசியல் புரியவில்லை, அதில் ஆர்வமும் இல்லை.