ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கும் படம் "பரியேறும் பெருமாள்". இப்படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டி வரும் வேளையில் நடிகர் கமல்ஹாசனும் படத்தை பார்த்து பாராட்டியிருக்கிறார்.
கமல் கூறியதாவது : எனது நண்பர்கள் பலர் போன் செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால் பார்த்தேன். அருமையான, நல்ல முயற்சி. தயாரிப்பாளர் ரஞ்சித்திடமும், மாரி செல்வராஜிடமும் இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள் வாழ்த்துக்கள்" என்றார்.