ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
பழம்பெரும் நடிகையும், பிரபல பின்னணி பாடகியும், நடிகையுமான டி.கே.கலாவின் தாயாருமான சண்முகசுந்தரி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சண்முகசுந்தரி. 40வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருந்த அவர் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் வடிவேலுவுக்கு நிறைய படங்களில் அம்மாவாகவும் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மிடில் க்ளாஸ் மாதவன் படத்தில் வடிவேலு குடித்துவிட்டு, சண்முகசுந்தரியை பார்த்து பேசும் அது வேற வாய்... இதுநாற வாய் என்ற காமெடி ரொம்ப பிரபலம்.
சமீபத்திய சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த சண்முகசுந்தரி நேற்று இரவு மரணம் அடைந்தார். மறைந்த அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகை சேர்ந்த பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2ம் தேதி அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. சண்முகசுந்தரிக்கு டி.கே.கலா, நீலா உள்ளிட்ட 5 மகள்கள் உள்ளனர். இவர்களில் டி.கே.கலா சினிமாவில் பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.