ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'சர்கார். கீர்த்தி சுரேஷ், கதாநாயகியாக நடிக்க வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.
இவரது இசையில் சமீபத்தில் வெளியான 'சிம்டாங்காரன்...' பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ள நிலையில் நேற்று மாலை மேலும் ஒரு சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டது.
சர்கார் படத்தின் பாடலிசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவிருக்கிறது. சென்னை மேற்கு தாம்பரத்திலுள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த விழா நடக்கிறது.
'சர்கார்' ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகள் மாலை 6.30 மணி முதல் சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 3000 விஜய் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான மீடியாக்களுக்கும் அனுமதி இல்லை.