வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
நடிகராக மட்டுமல்லாது பைக், கார் ரேஸில் அதிக ஈடுபாடு கொண்டவர். சில ஆண்டுகளாக டிரோன் என்று சொல்லப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
அஜித்தின் திறமையை புரிந்து கொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி., மாணவர்ளுக்கு ஆலோசனை வழங்க நியமனம் செய்தது. அஜித்தும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தார். தக்ஷா எனும் குழுவை உருவாக்கி டிரோன் தயாரிப்பில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானம் தொடர்பான போட்டியின் இறுதிப்போட்டியில் தக்ஷா குழுவும் இடம் பெற்றிருந்தது. அஜித் மேற்பார்வையில் தக்ஷா அணியினர் உருவாக்கிய ஆளில்லா விமானம், அதிக நேரம் வானில் பறந்து சாதனை படைத்ததோடு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது.