ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செக்க சிவந்த வானம்' படம் இன்று வெளியாகியுள்ளது. அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, அருண்விஜய், சிம்பு, ஜோதிகா என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே இந்தப்படத்தில் நடித்துள்ளதால் இந்தப்படத்திற்கு கேரளாவிலும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. குறிப்பாக சிம்பு ரசிகர்கள் கடந்த இரண்டு வார காலமாகவே புரமோஷன்களில் கலக்கி வருகின்றனர்.
இன்று சுமார் 112 தியேட்டர்களில் இந்தப்படம் திரையிடப்பட்டுள்ளது. வெல் பார்ன் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப்படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்துள்ளது. ஏற்கனவே மலையாளத்தில் வெளியான தீவண்டி மற்றும் வரதன் படங்கள் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருப்பதால் இந்தப்படத்திற்கும் இன்னும் அதிகமாக தியேட்டர்கள் ஒதுக்க முடியாமல் போனதாம்.