ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
விஜய் நடிக்கும் படம் என்றாலே ஒரு பாடலாவது சூப்பர் ஹிட்டாகி விடும் என்பது வழக்கமான ஒன்று. 'மெர்சல்' படத்தில் இடம் பெற்ற 'ஆளப் போறான் தமிழன்...' பாடல் விஜய்யின் முந்தைய பாடல்களின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதற்கடுத்து மீண்டும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'சர்கார்' படம் என்றதும் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
ஆனால், நேற்று முன்தினம் வெளியான 'சர்கார்' சிங்கிள் பாடலான 'சிம்டாங்காரன்' பாடல் பலத்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியானது. இருந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றும் விதத்தில் பாடலுக்கு என்ன அர்த்தம் என்றே தெரியாத நிலையில் சென்னைத் தமிழில் பல வார்த்தைகளை வைத்து பாடலை உருவாக்கியுள்ளனர். கடும் விமர்சனங்களை இந்தப் பாடல் ஏற்படுத்தியுள்ளது.
யு டியூபில் இரண்டு நாட்களுக்குள் 80 லட்சம் பார்வைகள், 5 லட்சம் லைக்குகளைக் கடந்தாலும் டிரென்டிங்கில் இந்தப் பாடல் இதுவரை நம்பர் 1 இடத்தைப் பிடிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை வெளியான 'வர்மா' டீசர் தான், தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் உள்ளது. 'வர்மா' டீசரை விட 'சிம்டாங்காரன்' பாடல் சுமார் 30 லட்சம் பார்வைகளை அதிகம் பெற்றிருந்தும் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க முடியாதது ஆச்சரியமாக உள்ளது.