மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான படம் கபாலி. இந்த படத்தில் ஒரு கேரக்டரில் ராதாரவியும் நடிப்பதாக இருந்ததாம். அந்த வேடத்துக்காக ஒரேயொரு நாள் மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்களாம்.
அதையடுத்து, கபாலி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள், அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணுவை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார் ராதாரவி. அப்போது பழைய முகம் வேண்டாம் என்று இயக்குனர் சொல்லி விட்டதாக கூறியிருக்கிறார்.
இந்த தகவலை, சமீபத்தில் சென்னையில் நடந்த கலைஞருக்கு வணக்கம் நிகழ்ச்சியில் பேசியபோது தெரிவித்தார் ராதாரவி. அதோடு, என்னை பழைய முகம் என்று சொன்னபோது, இருப்பதிலேயே ரஜினி தானே பழைய முகம் என்று நான் சொன்னேன் என்கிற தகவலையும் சொன்னார். இந்த நிகழ்ச்சியில் டைரக்டர் பா.ரஞ்சித்தும் கலந்து கொண்டார்.