ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செகண்ட் இன்னிங்ஸில் முதல் படமாக ஏ.எல்.விஜய் இயக்கிய தேவி படத்தில் நடித்தார் பிரபுதேவா. மூன்று மொழிகளில் வெளியான அப்படம் வெற்றியாக அமைந்தது. அதையடுத்து குலேபகாவலி, மெர்குரி, லட்சுமி படங்களில் நடித்தார். இந்தப்படங்கள் வெற்றியை தரவில்லை. தற்போது பொன்மாணிக்கவேல், சார்லி சாப்ளின்-2, யங் மங் சங் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, விஜய்யின் தேவி-2 படத்திலும் நடிக்கிறார் பிரபுதேவா. இதன் படப்பிடிப்பு மொரீஷியஸ் நாட்டில் தற்போது நடந்து வருகிறது. கோவை சரளாவுடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட போட்டோவை இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரபுதேவா, தேவி-2 படப்பிடிப்புக்காக மொரீஷியஸில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.