ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகன் சரண், அமெரிக்காவில் எஸ்.பி.பி 50 என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது இளையராஜா, எஸ்.பி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், நான் இசை அமைத்த பாடல்களை யார் பாடினாலும் எனக்கு ராயல்டி தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு நடந்த கச்சேரிகளில் எஸ்.பி.பாலசுப்பிரணியம் பாடவில்லை. கடந்த சில மாதங்களாக இளையராஜா பாடல்களை பாடாமல் இருந்த எஸ்.பி.பி, இப்போது மீண்டும் பாட ஆரம்பித்திருக்கிறார். இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது :
இளையராஜா, தனது பாடல்களை பாடக்கூடாது என்று சொன்னாலும் பாடிக் கொண்டு தான் இருப்பேன். அவர் இசையமைத்த பாடல்களை பாடுவதற்கு நேரடியாக எனக்கு தடை விதிக்கவில்லை. என் பையன் நடத்திய ஒரு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். அந்த பிரச்னை இன்னும் ஓயவில்லை. அவர் ஏன் அப்படி செய்தார் என்று எனக்கு தெரியாது.
இது நடந்த பிறகு ஒரு ஆண்டுவரை அவரது பாடல்களை பாடாமல் இருந்தேன். அதன்பிறகு யோசித்தேன். நான் இளையராஜா இசையில் தான் அதிகமாக பாடினேன். எனவே அதிலும் எனக்கு அதிக பங்கு இருக்கிறது என்று தோன்றியது. அதன்பிறகு பாட ஆரம்பித்து விட்டேன்.
இதற்காக சட்டப்படி அவர் நடவடிக்கை எடுத்தால் நானும் சட்டப்படியே பதில் சொல்ல முடிவு செய்து இருக்கிறேன். அவரது பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பாடுவேன், நிறுத்தவே மாட்டேன். இந்தமாதிரி செய்துவிட்டாரே என்பதற்காக அவர் மீது இம்மியளவும் கவுரவம் குறையவில்லை. ஒரு இசையமைப்பாளராக இப்போதும் சரி, எப்போதும் சரி அவரது காலை தொட்டு கும்பிடுவதற்கு தயங்கவே மாட்டேன்.