ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்ரேயா ரெட்டி நடித்து முடித்துள்ள படம் அண்டாவ காணோம். அவருடன் வினோத் முன்னா, நவீனா நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கி உள்ளார், அஷ்வமித்ரா இசை அமைத்துள்ளர். பி.வி.சஙகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் முடிந்து 2 வருடங்கள் ஆகிறது. ஆனால் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமாருக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக படம் வெளிவருவதில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டது. சுமார் 5முறை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது வருகிற அக்டோபர் 18ந் தேதி வெளிவரும் என்று மீண்டும் அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கூறியிருப்பதாவது:
பூஜை விடுமுறை துர்கா தேவி கடவுளை அடையாளப்படுத்துகிறது. நவராத்திரி பண்டிகையே அரக்கர்கள் மீது துர்க்கை செலுத்தும் ஆதிக்கத்தை சொல்லும் ஒரு பண்டிகை தான். பெண்ணை மையப்படுத்திய இந்த கதையை, பூஜை நாட்களில் வெளியிடுவதை விட வேறு சிறந்த அம்சம் என்ன? இப்போது உச்சத்தில் இருக்கும் நாயகியை மையப்படுத்திய கதைகளின் ட்ரெண்டை உருவாக்கியதே இந்த படம் தான்.
இந்த படத்தில் ஸ்ரேயா ரெட்டி நிறைய உழைத்திருக்கிறார். தேசிய அளவில் அதற்கான அங்கீகாரத்தை பெறுவார் என்று நம்புகிறேன். குடும்பத்துடன் பார்க்கும் பொழுதுபொக்கு படங்களை தேர்வு செய்யும் தனது கதைத் தேர்வு திறமையை மீண்டும் நிரூபிப்பார். பெண்களின் சக்தி என்ன என்பது வரும் அக்டோபர் 18ஆம் தேதி தெரியும் என்றார் தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார்.