Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீமராஜா - முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி?

15 செப், 2018 - 12:26 IST
எழுத்தின் அளவு:
Seemaraja-:-First-day-collection-Rs.13.5-core

வருத்தப்படாத வாலிபர்சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் சீமராஜா. சமந்தா கதாநாயகியாக நடித்த இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியன் நடித்திருக்கிறார். ரீ-என்ட்ரி கொடுத்துள்ள சிம்ரன், மலையாள நடிகர் லால் ஜோடியாக நடித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வெளியான இப்படத்துக்கு, ஊடகங்களின் விமர்சனங்களும் சுமாராக தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீமராஜா படத்தின் தமிழ்நாடு திரையரங்க முதல் நாள் வசூல் 13.5 கோடி என்று தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா அறிவித்துள்ளார்.

“சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல் நாள் வசூலே ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும்" என்று ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement
அதர்வாவுக்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்அதர்வாவுக்கு ஜோடியான பிரியா பவானி ... ரூ.9 கோடி ரூபாயை வடிவேலு திருப்பிக் கொடுப்பாரா? ரூ.9 கோடி ரூபாயை வடிவேலு திருப்பிக் ...


வாசகர் கருத்து (8)

Karhikeyan - Chicago,யூ.எஸ்.ஏ
06 அக், 2018 - 17:04 Report Abuse
Karhikeyan ஓவர் ஆட்டம் இவன் உருப்பட மாட்டான் ... பேராசை புடித்தவன்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
18 செப், 2018 - 04:41 Report Abuse
meenakshisundaram 'முத்து' படத்தில் வடிவேலு நாடகம் ஒன்றில் ராஜா வேஷத்தில் வருவார் ,அவரை போலெ சிவா கார்த்திகேயன் raja லுக் உள்ளது
Rate this:
Sairaghav - Coimbatore,இந்தியா
16 செப், 2018 - 19:04 Report Abuse
Sairaghav சிவகார்த்திகேயன் அவர்களுக்கு - தங்களுடைய முதல் நான்கைந்து படங்களில் உங்களை மிகவும் ரசித்தோம். அதற்கு காரணம் நீங்கள் நீங்களாக நடித்து இருந்தீர்கள். ஆனால் தற்போது வெளிவரும் உங்களின் படங்கள் உங்களை நீங்களே பில்டப் செய்து கொள்ளும் தற்பெருமை படங்களாகவே வந்து கொண்டிருக்கிறது. அரைத்த மாவையே அரைக்கிறீர்கள். தற்போது முன்னணியில் இருக்கும் பிரபல கதாநாயகர்கள் அனைவரும் முப்பத்திலிருந்து ஐம்பது படங்களுக்கு மேல் நடித்து இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் சில படங்களிலேயே அவர்கள் உயரம் தொட நினைப்பது வேதனையாக இருக்கிறது. தற்போது வெளிவந்து இருக்கும் சீமராஜா படத்தில் விவசாயிகளின் வேதனைகளை பற்றி இரண்டு டயலாக் சொல்லி விட்டு இருபது பூந்தொட்டிகளை வேண்டுமென்றே உங்கள் தாத்தா உடைப்பதுபோல் காட்டுகிறீர்கள். யாரை ஏமாற்றுகிறீர்கள். படம் முழுக்க உங்களை அனைவரும் ராஜா ராஜா என்று சொல்லி கூஜா தூக்க வைத்து இருக்கிறீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள் உலகம் உங்களை போற்றும்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
16 செப், 2018 - 04:18 Report Abuse
meenakshisundaram சிவா கார்த்திகேயனுக்கு முதல் problem அவரது தோள்கள் .சொத்தை நடிகர்கள் கூட திரைப்பட வாய்ப்பு கிடைத்ததும் body build up செயது விடுகிறார்கள்.இவர் இன்னும் ஒரு வத்தல் nurse போல இருக்கிறார் .வேஷம் பொருந்தவில்லை.
Rate this:
Sasidharan Janarthanan - coimbatore,இந்தியா
15 செப், 2018 - 20:49 Report Abuse
Sasidharan Janarthanan படம் நன்றாக உள்ளது family padam
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in