காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள '2.0' படத்தின் டீசர் நேற்று காலை யு டியூபிலும், தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது. வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்ற இந்த டீசர் ஒரு நாளைக்குள் கோடிகளைத் தொட்டிருக்கிறது.
தமிழ் டீசரை விட ஹிந்தி டீசருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வரை ஹிந்தி டீசருக்கு யு டியூபில் 1 கோடியே 21 லட்சத்திற்கு அதிகமான பார்வை கிடைத்துள்ளது. தமிழ் டீசருக்கு 1 கோடியே 9 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது. தெலுங்கு டீசர் 54 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. மூன்று மொழிகளிலும் மொத்தமாக 2.85 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மூன்று மொழிகளுக்குமான லைக்குகள் பத்து லட்சத்தைக் கடந்துள்ளது.
2.0 டீசருக்கு பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளது. பலர் பிரமாதம் என்றும், சிலர் வெறும் கிராபிக்ஸ் மிரட்டல் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். படத்தில் ஹிந்தி நடிகரான அக்சய் குமார் வில்லனாக நடித்திருப்பதால் ஹிந்தி டீசருக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
2.0 டீசர், ஒரேநாளில் மூன்றுமொழிகளிலும் யூடியூப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இணையதளங்களில் மொத்தமாக 3.20 கோடி பார்வைகள் கிடைத்திருக்கின்றன.