ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தான் இயக்கும் படங்களில் எல்லாம் இயக்குனர் ஹரி விடாமல் ஒரு சென்டிமென்ட்டை பின்பற்றி வருகிறார்.. அதாவது தனது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை வெளி மாநிலங்களில் அமையுமாறு பார்த்துக் கொள்கிறார்.
சிங்கம் படத்தில் ஆந்திராவில் க்ளைமாக்ஸ் சண்டைகாட்சியை அமைத்த ஹரி, அது வொர்க் அவுட் ஆகவே, அடுத்து விஷாலின் பூஜை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பீஹாரில் நடக்குமாறு பார்த்துக்கொண்டார். சிங்கம்-2 படத்தில் இன்னும் ஒரு படி மேலேபோய் தென்னாப்பிரிக்காவிற்கே போய்விட்டார்..
இப்போது அவரது டைரக்சனில் வெளியாகவுள்ள சாமி ஸ்கொயர் படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிட்டுள்ளார்கள்.. இதில் ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டகங்களுக்கு மத்தியில் கார் சேஸிங்கில் பறக்கிறார் நாயகன் விக்ரம். அந்தவகையில் இப்படத்திலும் தனது வெளி மாநில சென்டிமென்ட்டை விடாமல் தொடருகிறார் ஹரி.