Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்பேத்கரின் தேரை இழுத்துச் செல்வேன்: பா.ரஞ்சித்

10 செப், 2018 - 12:37 IST
எழுத்தின் அளவு:
Pa-Ranjith-praises-about-Ambedkar

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை, ஸ்ரீதர் ஒளிப்பதிவு, எழுத்தாளர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். படத்தை தயாரித்தது குறித்து பா.ரஞ்சித் கூறியதாவது:

ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளராக அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு மனித சமூகத்தின் மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள் தான் எப்போதும் நினைவில் இருக்கும். அவர் ஒரு விசயத்தை வேதனையோடு சொன்னார். நான் கஷ்டப்பட்டு ஒருதேரை இழுத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன். தயவுசெய்து அதைப் பின்னோக்கி இழுத்து விடாதீர்கள் என்று சொன்னார். நிச்சயமாக அந்தத் தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன்.


அதற்கான ஆரம்பம் தான் இந்தப் படம். எனக்கிருக்கிற வாய்ப்புகளில் தொடர்ந்து மனித சமூகத்திற்கு இடையே உள்ள முரண்களை முரணை உடைக்கிற வேலையை செய்வேன். இதனால் என் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களையும் தாண்டி, சில வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. என்னால் முடிந்தவற்றை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு வயது முதலே எனக்கு உண்டு. அந்த எண்ணம் தான் இப்போதும் என்னை இயக்குகிறது.


சில நேரங்களில் குடும்பம், பொருளாதாரம் குறித்த யோசனை எழுந்தாலும், நம்மைச்சுற்றி இருப்பவர்கள் நமக்கு அளிக்கும் ஆதரவு தான் நம்மை இயங்க வைக்கிறது. நான் போகும் பாதை சரியா என யோசிக்கும் போதெல்லாம், என் மனைவி அனிதா எனக்கு ஊக்கமளிப்பார். நாம் எங்கிருந்து வந்தோம் என்று நமக்குத் தெரியும். இப்போதிருப்பது இல்லாமல் போனாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை. நீ செய்யும் வேலையை நிறுத்தாதே, என தைரியம் கொடுப்பார். அவர் கொடுத்த தைரியம் தான் இந்த படம். என்றார் பா.ரஞ்சித்.


Advertisement
மீண்டும் வருகிறார் பூஜா ஹெக்டேமீண்டும் வருகிறார் பூஜா ஹெக்டே மாமியார் ஆனார் தேவயானி மாமியார் ஆனார் தேவயானி


வாசகர் கருத்து (4)

Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11 செப், 2018 - 11:41 Report Abuse
Swaminathan Nath சினிமா எடுப்பதற்கு பதில் கட்சி ஆரம்பிக்கலாம், லாபம் அதிகம் வரும்,
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
11 செப், 2018 - 05:36 Report Abuse
 nicolethomson காசு என்ற போர்வையில் அம்பேத்கரின் பெயரை நாறடிக்காதே ரஞ்சித்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
11 செப், 2018 - 04:23 Report Abuse
meenakshisundaram மாதவா இந்த கொசு தொல்லை தாங்க லேப்பா.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
10 செப், 2018 - 17:49 Report Abuse
Bhaskaran உனக்குமுன்னாடிப்படிப்பேசியபலர் பணம் சேர்ந்தவுடன் எல்லாத்தையும் மறந்து சுகவாழ்கையிலே மூழ்கிட்டாங்கங்கிறது தெரியாம பேசாதே அப்பா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in