ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார். இதற்காக ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு சுமார் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மாவட்ட, மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, அதை புத்தக வடிவில் மன்ற நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ளார் ரஜினி. அதில் கூறப்பட்டுள்ள முக்கியமான கட்டுப்பாடுகள் வருமாறு:
2. இளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளே இருக்க வேண்டும்.
3. இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைக்களுக்கு ஆக்கப்பூர்வ தீர்வு காண இளைஞர் அணி, மன்றத்திற்கு துணை புரிய வேண்டும். மாற்றத்தை விரும்பும், சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர் சமூதாயத்தின் சக்தியை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்க வேண்டும்.
4. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் ரஜினி மக்கள் மன்றத்தில் இணையலாம்.
5. ஜாதி மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக சேர அனுமதியில்லை.
6. மன்றக் கொடி துணியால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ப்ளாஸ்டிக், பாலிதீன் ஆகிய பொருட்களால் செய்யப்பட்டிருக்க கூடாது.
7. மன்றப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது.
8. ஏற்கனவே மன்ற நிர்வாக பொறுப்புகள் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ள பிற நேரடி உறவினர்களுக்கு மன்றத்தில் வேறு பதவிகள் / பொறுப்புகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. அதாவது ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்புகள் பதவிகள் வழங்கப்படும்.
9. பொதுமக்களிடம் குறிப்பாக முதியவர்களிடமும், பெண்களிடமும் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
10. நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.
11. மன்ற உறுப்பினர்களிடையே ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்
12. தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது.
13. மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஒருபோதும் நடக்கக்கூடாது.
14. நம் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்பவரின் கருத்தை மட்டுமே விமர்சிக்கலாமே தவிர தனி நபர் விமர்சனம் எதுவும் செய்யக்கூடாது.
15. ஏனைய உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.
16. கண்ணியம் தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.
17. தலைமையகத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி பொது மக்களிடமிருந்து மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதியோ அல்லது பிற பொருளுதவியோ ஒருபோதும் திரட்டக்கூடாது.
18. தங்களால் இயன்ற நிதி உதவிகளைத் தந்து நடத்தும் நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.
19. அந்தந்த பகுதியில் தொடர்ந்து மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.
20. சட்டவிரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.
21. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது.
22. சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் போது கண்ணியம் காக்க வேண்டும்.
23. மன்றத்தின் பெயரில் எந்தத் தனி நபரையும் கேலியாக சித்தரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ கூடாது.
24. சமூக வலைத்தளங்களில் சொந்த கருத்தை வெளியிடும்போது மன்றத்தின் பெயரை பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் ரஜினி.