ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஒரு இயக்குநரின் படத்தில் நடித்து, அந்தப்படம் வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து அதே இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருவார்கள் முன்னணி நடிகர்கள். அந்தவகையில் விஜய், அஜித் இருவரும் மாறி மாறி ஒரே இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்கள். அஜித் நான்காவது முறையாக சிவா உடன் விஸ்வாசம் படத்தில் பணியாற்றி வருகிறார்.
அதேப்போன்று நடிகர் விஜய், முருகதாஸ் உடன் துப்பாக்கி, கத்தி படங்களில் பணியாற்றி விட்டு, இப்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62வது படமாக உருவாகி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட சர்கார் படம் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடைய இருக்கிறது. இதையடுத்து விஜய்யின் அடுத்தப்படத்தை யார் இயக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது.
அவர் வேறு யாருமல்ல இயக்குநர் அட்லி தான். விஜய்யை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த அட்லிக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கி இருக்கிறார் விஜய். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற செப்., 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.