ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் த்ரிஷா. கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை.
தற்போது கார்த்திக் சுப்பராஜ் படம் மூலம் ரஜினி உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. த்ரிஷாவை ரஜினிக்கு ஜோடியாக்கி அவரது நீண்டகால கனவை நனவாக்கி விட்டார் கார்த்திக் சுப்பராஜ்.
இந்நிலையில் ரஜினியுடன் தான் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பாபா முத்திரையுடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் த்ரிஷா. இது ரசிகர்கள் செய்த போஸ்டர் டிசைனா அல்லது படத்தில் இடம் பெறும் காட்சியா என்பது தெரியவில்லை.