ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ்நாட்டில் எந்த ஒரு இயற்கை இடர்ப்பாடுகள் வந்தாலும் திரையுலக நட்சத்திரங்கள் என்ன நிதியுதவி தருகிறார்கள் என்பதை பலரும் எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்பு தற்போது கேரளா வெள்ள நிவாரண நிதியிலும் எதிரொலித்துள்ளது. கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு சிறிய நட்சத்திரங்கள் முதல் பெரிய நட்சத்திரங்கள் வரை நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
விஜய், அஜித் இதுவரை எந்த உதவியும் அளிக்கவில்லை என்ற ஒரு பேச்சு இருந்து வந்தது. ஆனால், விஜய் அவருடைய கேரளா ரசிகர் மன்றம் சார்பாக உதவிகளைச் செய்து வருகிறார் என்று நேற்று தகவல் வெளியானது. அதே சமயம், அஜித் இதுவரை எந்த உதவியையும் அளிக்கவில்லை என்ற பேச்சும் இருக்கிறது.
இதனிடையே, நடிகர்கள், நடிகைகள் அளித்த உதவித் தொகை குறித்தும் சிலபல கருத்துப் பரிமாற்றங்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கிறது. தமிழ்த் திரையுலகத்தின் நம்பர் 1 நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் 15 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளது ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்துக்கு அடுத்த வரிசையில் இருக்கும் நடிகர்களான கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி ஆகியோர் ரஜினிகாந்த்தை விட அதிகத் தொகையை நிதியுதவியாக அளித்துள்ளார்கள்.
அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்திருக்கும் ரஜினிகாந்தின் நிதியுதவித் தொகை பற்றி அரசியல் தொண்டர்களும் பல கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.