ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நயன்தாரா நடித்து திரைக்கு வந்துள்ள படம் கோலமாவு கோகிலா. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிகப்படியான தியேட்டர்களில் வெளியான இந்த படம் தமிழில் வெளியான அதே நாளில் தெலுங்கில் கோ கோ கோகிலா என்ற பெயரில் வெளியானது.
அந்த வகையில், கடந்த வெள்ளியன்று வெளியான கோலமாவு கோகிலா படம் திரையிட்ட மூன்று நாட்களில் ரூ. 10 கோடி வசூலித்துள்ளது. இது இந்திய அளவில் ஒரு கதாநாயகியின் படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், கோலமாவு கோகிலா படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், "படம் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்" என்று இயக்குநர் நெல்சனுக்கு போன் மூலம் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
சுவாரஸ்யமான, நகைச்சுவையான, குடும்ப கிரைம் டிராமா. நயன்தாரா அமைதியாக, க்ளாஸாக நடித்திருக்கிறார். அனிருத் ராக்ஸ். இயக்குநர் நெல்சன் புத்துணர்ச்சியான, ஆச்சர்யமான படத்தைக் கொடுத்திருக்கிறார்" என இயக்குநர் ஷங்கர் டுவிட்டரில் இப்படம் பற்றி பாராட்டியிருக்கிறார்.
இதைப்போன்று ஹிந்தி இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரும் கோலமாவு கோகிலா படத்தை பாராட்டியிருக்கிறார்.