ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 2.ஓ, சர்கார், செக்கச் சிவந்த வானம், பெயரிப்படாத சிவகார்த்திகேயன் படம் ஆகியவற்றுக்கு இசை அமைத்து வருகிறார். இந்த நிலையில் கடந்த காலங்களில் ஏ.ஆர்.ரகுமான் மேற்கொண்ட இசை பயணங்கள் டெலி சீரிஸாக தயாராகி வருகிறது.
ஏ.ஆர்.ரகுமான் தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியா முழுக்க சுற்றுப் பயணம் செய்து முக்கியமான இசை கலைஞர்களை சந்தித்தார். அப்போது அவர்களுடன் நடத்திய உரையாடல், சேர்ந்து இசை அமைத்து பாடிய அனுபவம் ஆகியவற்றை வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார்.
இந்தியாவில் மறையும் நிலையில் உள்ள இசை வடிவங்கள், இசைக் கருவிகளை தேடியே ரகுமானின் பயணம் இருந்தது. இந்த வீடியோக்களை ரகுமானின் உரையாடலுடன் வெப் சீரிஸாக தயாரிக்கிறார்கள். இதனை ஸ்ருதி ஹரிகர சுப்பிரமணியம் இயக்குகிறார். இதற்கு ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான் என்று டைட்டில் வைத்திருக்கிறார்ள். கவிதாலயா நிறுவனம் தயாரிக்கிறது.