ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'விஸ்வாசம்' படத்தில் நடித்து வரும் அஜித் இந்தப் படத்தை தொடர்ந்து யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்? இந்தக்கேள்வி அவரது ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆர்வமாக இருந்து வருகிறது. 'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை விஷ்ணுவர்தன், 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கிய வினோத், மோகன்ராஜா ஆகியோரில் ஒருவர் இயக்கலாம் என்று செய்திகள் அடிபட்டன.
இந்நிலையில் அஜித்தன் அடுத்தப்படத்தை இயக்கப்போவது 'தீரன் அதிகாரம் ஒன்று' இயக்குனர் வினோத் என்று சில வாரங்களுக்கு முன் உறுதியான தகவல் வெளியானது. அஜித்தை சந்தித்து 'ஒன் லைன்' சொல்லியுள்ளார் வினோத் என்றும், அவர் சொன்ன அந்த 'ஒன் லைன்' அஜித்துக்கு பிடித்துவிட்டது என்றும், அதனால் வினோத் இயக்கத்தில் நடிக்க அஜித் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் கூடுதலான தகவல்களும் படத்துறையில் பரவின
இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இது குறித்து எந்த அதிகாரபூர்வமாக யாதொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் ரீமேக் படத்தை இயக்கச் சொன்னதால் அஜித் படத்திலிருந்து வினோத் வெளியேறிவிட்டதாக புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.